நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது. அதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, ஜூன் 20-ம் தேதிக்குள் மத்திய நேரடி வரிகள் வாரியம் இது குறித்து நிதி அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும் என அதிகார வட்டாரங்கள் கூறியதாகவும் சிஎன்என்-ஐபிஎன் மேலும் தெரிவித் துள்ளது. வீட்டுக்கடன் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மீதான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. மருத்துவ காப்பீட்டுத் திட்ட பிரீமியம் ரூ. 5000 வரை உயர்த்தப்படலாம் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையின் கீழ் ரூ.2 லட்சத்துக்கு மேலும் ரூ.5 லட்சத்துக்குள்ளும் வருமானம் உடையவர்கள் வரி விலக்குகளுக்கு உட்பட்டு 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதால் புதிய நடைமுறைகளில் ரூ.5 லட்சம் வருமானம் வரை வரி செலுத்தத் தேவை இருக்காது. இப்போது, ரூ.2 லட்சம் - ரூ.5 லட்சம் வருமான பிரிவினர் 10 சதவீதம், ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் பிரிவினர் 20 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டி உள்ளது. மேலும் கூடுதலாக கல்வி வரி செலுத்த வேண்டும். மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பட்ஜெட் தயாரிப்புப் பணியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தீவிரமாக ஈடுபட் டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.