முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று அரசுசார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அவர் ஆஜராகும் பட்சதில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 21.கருணை மதிப்பெண் வழங்குவது குறித்த அரசின் நிலைப்பாடு தெரியவரும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.