Pages

Tuesday, May 20, 2014

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை.
இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தமிழுக்கு கூடத்தான் கேஸ் இருக்கு . அப்புறம் எப்படி பணி ஆணை வழங்க்கினார்கள்?

    ReplyDelete
  3. கவலை பட வேண்டாம் வரும் ஜூன் மாதம் கண்டிப்பாக பணி நியமனம் . மின்சாரம் போல் போர் கால நடவடிக்கை எடுக்கப்படும் . (செய்தி MAY 2018)

    ReplyDelete
  4. சட்டசபை தேர்தல் 2018

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
    முதுகலை ஆசிரியர் இடியாப்ப சிக்கலை புட்டாக தீர்ப்போம் .

    ReplyDelete
  5. WEDNESDAY, APRIL 30, 2014
    கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது

    ReplyDelete
  6. WEDNESDAY, APRIL 30, 2014
    இதுகுறித்து டி.ஆர்.பியி டம் கேட்டதற்கு, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது

    ReplyDelete
  7. அன்று 25 இன்று 40 நாளை 80 எல்லாம் பொய்...

    ReplyDelete
  8. என்ன செய்வது,ஆக்கப் பொரறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டியதுதான். நம்பிக்கையை தயவு செய்து கை விட வேண்டாம்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.