மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வருக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சேகர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்து வந்ததற்காகவும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் செய்து வந்தமைக்காகவும் நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றமைக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கல்வித் துறைக்கு 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் தங்களின் ஆட்சிக்கு ஆசிரியர் சமூகம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
Please Dont publish these type of letters
ReplyDeleteI agree dont publish these type of baseless and truthless letters all teachers are happy?
ReplyDelete