Pages

Friday, March 21, 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது. தேர்வுகள் முடிந்து கடந்த 10ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இதில் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாகவும், தேர்வே எழுதாத மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாகவும், என பல்வேறு குளறுபடிகளுடன் முடிவுகள் வெளியாயின.இதை கண்டித்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழகம் சார்ப்பில் குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தேர்வு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டு கமிட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்துடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில் இணையதளத்தில் வெளியான தேர்வு முடிவு வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. வரும் 31ம் தேதிக்குள் சரியான தேர்வு முடிவுகளை கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் உயர்கல்வித்துறை செயலரின் ஒப்புதலின்பேரில் தேர்வு முடிவுகள் மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.