பிளஸ் 2 தேர்வில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அறிவியல், கணக்கு தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன.பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்கள் முடிந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
கணக்கு, இயற்பியல், வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடந்தன. இவை தவிர கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வு 25ம் தேதி நடக்க இருக்கிறது. மற்ற பாடங்களை பொருத்தவரை இன்னும் 7 தேர்வுகளும், தொழிற்கல்வி தேர்வுகளும் நடக்க இருக்கின்றன. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. அப்போது பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 12 பேர் பிட் அடித்ததாக சிக்கினர்.இன்று முதல் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. இன்றும் நாளையும் முதன்மைத் தேர்வாளர்கள், சிறப்பு அலுவலர்கள் விடைத்தாள் திருத்து வார்கள். 24ம் தேதி துணைத் தேர்வு அதிகாரிகள் திருத்துகின்றனர். அவற்றை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.