சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தினமும் காலையில் ஒரு ஆசிரியர் முன்னதாகவே பள்ளிக்கு வந்து பள்ளி வாயிலை திறக்க வேண்டும். நேற்று வர வேண்டிய ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் மாணவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு ஆசிரியரிடம் அப்பகுதி மக்கள் இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.
தொடர்ந்து மற்றொரு ஆசிரியர் வந்த பிறகு பள்ளியின் கதவு திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி துவங்கும் நேரமாகியும் சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென பள்ளியின் வெளிப்புற வாயில் கேட்டை இழுத்து பூட்டி, உரிய பதிலளிக்காத ஆசிரியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஒரத்தூர் போலீசார் மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய தொடக்கக்கல்வி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பூட்டிய கேட்டின் கதவை திறந்து விட்டு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்கள் பள்ளி வாயில் கேட்டை இழுத்து பூட்டி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பர பரப்பை ஏற்படுத்தியது.
asiriyargal thangal nilaiyil sariyaga irunthal makal ipdi edirga irukamatargal.endru indha telivu varum nam asiriya perumakaluku?
ReplyDeleteAntha palliyil padikkum maanavargalin nillaiyil nam pillaigal irudhaal eppadi irukkum nam pillaigalin edhirkaalan enru ovvoru aasiriyar ninaithaal, anru maarum arasu palliyin avala nilai... Ippadikku.... oru aasiriyar
ReplyDelete