Pages

Saturday, March 29, 2014

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை முதல் முறையாக கொல்கத்தாவில் எஸ்பிஐ வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயலலாம் என்று கூறப்படுகிறது.
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்கள், தங்களது முதுமை காரணமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் வந்து தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அவற்றை களையவே இந்த திட்டத்தை எஸ்பியை கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நாட்டில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.