பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும், பறக்கும் படை ஆசிரியர்கள், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிவகங்கையில், பிளஸ் 2 அரசு பொதுதேர்வு நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஷ்வரன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் பேசுகையில், சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 25, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில், 26 தேர்வு மையங்கள் என, மாவட்ட அளவில் 51 தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. இதில், சிவகங்கையில் 7166; தேவகோட்டையில் 7,675 மாணவர்கள் என, 14,841 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வினை கண்காணிக்க, 51 முதன்மை கண்காணிப்பாளர்கள், 51 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின் போது, ஒழுங்கீன செயல்களில், ஈடுபடுபவர்களை கண்காணிக்க, சிவகங்கை,தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கென, பறக்கும் படையில் 65 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைகளில், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். பறக்கும் படையில் இருக்கும் ஆசிரியர்கள் விருப்பு வெருப்பின்றி, நேர்மையான முறையில் பணியாற்றவேண்டும். தேர்வு மையங்களில், "பிட்' அடிக்கும் மாணவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சீனிவாசன், மனோகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.