Pages

Tuesday, February 4, 2014

பள்ளி முதல்வர், ஆசிரியர்களை நீக்கும் அதிகாரம் பெற்றோருக்கு வேண்டும்: கல்வி அமைச்சர்

பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யும் மற்றும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று டில்லி மாநில கல்வியமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


ஒரு அரசுப் பள்ளிக்கு திடீர் வருகைப் புரிந்து சோதனையிட்டப் பிறகு, இந்தக் கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும், சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. எனவே, மாணவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே கற்பித்துக் கொண்டு, தேர்வுகளை நடத்திக் கொள்வதை நான் காண்கிறேன்.

ஒரு ஆசிரியர் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு வரவில்லை என்று குழந்தைகள் என்னிடம் கூறினார்கள். நான் வருகைப் பதிவை சோதனையிட்டபோது, அதில் காலை 9.30 மணிக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும், சத்துணவை சோதனையிட்டபோது, அதில் புழுக்கள் இருப்பதை பார்த்தேன். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், பள்ளிக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நபர் அதிகமாக சம்பாதிக்கிறார். எனவே, அதற்கான உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும். நான் ஆய்வுசெய்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. Ok . Appadiye ungalayum pathavi neekkam seiyyavum muthalil makkalukku adhikaram kudu man.

    ReplyDelete
  2. S. Ivangala solradhuku aal illapa. Aniyayam panranga. Schoolae vaendam. Avangala padikatum. Nadu nalla olukama irukum.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.