ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள்
நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத்
துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.
ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகிய இருவரும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக
இருப்பர்.முன்னதாக 7-வது ஊதிய குழு அமைப்பதற்கு கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் பிரதமர் ஒப்புதல் தந்திருந்தார். ஊதிய உயர்வு குறித்த
பரிந்துரைகளை தர இக்குழுவுக்கு 2ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது.இது
தரும் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.