ஊட்டி, ஆசிரியர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில், 3.50 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது' என, ஆசிரியர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில், 1,200க்கும் மேற்பட்ட, ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சங்கத்தில், ஆசிரியர்களுக்கு கடன் வழ ங்கியதாக கூறி, பல கோடி ரூபாயை, வங்கி செயலர் மோசடி செய்துவிட்டார் என்ற புகாரை அடுத்து, வங்கி செயலர் சத்தியமூர்த்தி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சத்தியமூர்த்தி, "ஆசிரியர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விட்டது' எனக் கூறி, தன் பணி நீக்கத்திற்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.
இதுதொடர்பாக, நேற்று, மாவட்ட துணை பதிவாளர் சித்ரா முன்னிலையில், துறை ரீதியான விசாரணைக்கு, புகார் கூறியிருந்த ஆசிரியர்கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கூறியதாவது: கடந்த, 2009ல், 160க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சங்கத்தில், கடன் பெற விண்ணப்பித்தோம். அதற்கு, "வங்கி கணக்கு துவங்க வேண்டும்' என, வங்கி செயலர் சத்தியமூர்த்தி கூறி, ஒவ்வொரு ஆசிரியரிடமும், சேமிப்புக் கணக்கு துவங்கும் படிவத்துடன், பணத்தை திரும்ப எடுக்கும் படிவத்திலும் கையெழுத்து வாங்கி கொண்டார். 3 8 லட்சம் ரூபாய், ஆசிரியர்கள் கடன் வேண்டி விண்ணப்பித்தனர். ஆனால், எங்களுக்கு, கடன் வழங்கவில்லை. அதே சமயம், எங்களுக்கு கடன் வழங்கியது போல், கணக்கு காண்பித்து, சத்தியமூர்த்தி, 3.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, மனு அனுப்பினோம். "விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என்ற தகவல் மட்டுமே, எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது; மாறாக, சம்பந்தப்பட்டவர் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர். நேற்று காலை, 10:00 மணிக்கு, விசாரணை துவங்கும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், மதியம், 12:00 மணி வரை, ஆசிரியர்கள் வெளியில் காக்க வைக்கப்பட்டனர்; அதே சமயம், அலு வலகத்தில் இருந்த சத்தியமூர்த்தி, வெளியேறி சென்றார். கோபமடைந்த ஆசிரியர்கள், துணை பதிவாளர் சித்ராவை முற்றுகையிட்டு, "விசாரணைக்காக அழைத்து விட்டு, வங்கி செயலரை எப்படி வெளியே செல்ல அனுமதிக்கலாம்' என, கேள்வி எழுப்பினர். சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. துணை பதிவாளர் சித்ரா, ""உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; கோர்ட் வழிகாட்டுதல் பெற்று, உரிய தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும்,'' என, உறுதியளித்ததை தொடர்ந்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
பட்டை நாமந்தானா
ReplyDelete