Pages

Saturday, February 22, 2014

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் மேற்படிப்பு அல்லது பணி தொடர்பாக, படிக்க விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, விடுமுறையில் செல்லும் போது, கடன் மற்றும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, பத்திரம் அளிக்க வேண்டும். இதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், சிலர், விடுமுறை முடிந்ததும், பணிக்கு திரும்பாமல், வேறு வேலைக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக, புது அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, படிப்புக்காக விடுமுறையில் செல்பவர்கள், "விடுமுறை முடிந்ததும், மீண்டும் பணியில் சேர்வேன்' என, உத்தரவாதம் அளித்து பத்திரம் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட விடுமுறை முடிந்ததும், அடுத்த நாளே, ஊழியர் பணிக்கு சேர வேண்டும்' என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.