Pages

Wednesday, January 29, 2014

சேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களின் சேமநல நிதி ரூ.2 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ரா.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் மு.ஆ.தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்திரன், மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், அனைத்து ஆசிரியர்கள் நலச்சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஞா.விவேக், மகளிரணிச் செயலாளர் மு.ரேவதி, அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் துரை.மா,வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்ட நிறைவில் உதவிஆட்சியரை சந்தித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.