Pages

Wednesday, January 29, 2014

புதிய 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழின் நகல், முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.பின், விண்ணப்பத்தை பான்கார்டுக்கான விண்ணப்ப மையங்களில், அளிக்கும்போது, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட வேண்டும்.

சரிபார்ப்புக்கு பின், அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம் திரும்ப அளிக்கப்படும். இது, பிப்ரவரி, 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.அத்துடன், புது பான்கார்டு வாங்குவதற்காக, வருமான வரித்துறை வசூலிக்கும் கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய் ஆக உயர்கிறது. இப்போதுள்ள கட்டணம், 94 ரூபாய்; 11 ரூபாய் உயர்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.