Pages

Wednesday, January 29, 2014

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.
கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் பட்ஜெட்டில், 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படலாம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.இவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நிதியில், ஆசிரியர், அதிகாரிகளுக்கு, பெரும்பகுதி சம்பளம் அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள்,சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.அறிவுசார் பூங்காகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கல்வித் துறைஅலுவலகங்கள் மற்றும் சென்னை, கோட்டூர்புரம்நுாலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா என்ற, பிரமாண்டமான கட்டடம் கட்டப் படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிப்பு அளவிலேயே நிற்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.