2013ம் ஆண்டு மாநில கல்வி வாரிய தேர்வுகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சென்று, 10 நாட்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அசாம் மாநில அரசு இரண்டாவது முறை செயல்படுத்துகிறது.
இதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசினுடையதே. அந்த மாணவர்கள், வாஷிங்டன் டி.சி., நியூயார்க், AT & T Bell Lab, பென்ஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வருவார்கள்.
மாணவர்களின் நாசா வருகையால், வான்வெளி ஆராய்ச்சிப் பற்றிய பல சிறப்பான விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். ஆஸ்ட்ரோநாட் பயிற்சி, நாசா ஆய்வாளர்களுடனான வான்வெளி ஆராய்ச்சி செயல்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளுதல், வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டை புரிந்துகொள்ளுதல், நாசா விஞ்ஞானிகளை சந்தித்தல் மற்றும் நாசா வின்வெளி வீரர்களிடம் நேரடியாக உரையாடுதல் உள்ளிட்ட பல்வேறான வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு திட்டம், கடந்த 2011ம் ஆண்டு மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதன்முதலாக நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர் குழு நாசா சென்று வந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.