Pages

Saturday, October 19, 2013

கணினி பொறியியல் பட்டதாரிகளின் அவல நிலையை தெரிவிக்கும் சர்வே

ஏறக்குறைய 50% முதல் 60% வரையிலான கணிப்பொறி அறிவியல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பொறியாளர்கள், தங்கள் பாடங்களுடைய நுணுக்கமான கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.


மேலும், அத்துறையின் 80% பொறியாளர்களுக்கு தாங்கள் படித்த நுணுக்கமான விஷயங்களை நிஜ உலக தேவைகளுக்கேற்ப பயன்படுத்த தெரியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வுகள் மேலும் கூறுவதாவது: சுமார் 30% CS/IT பொறியாளர்களுக்கு, கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்கில் பயன்படுத்தப்படும் தியரி நிலையிலான கருத்தாக்கங்கள் பற்றி போதுமான அறிவு இல்லை. மேலும், இத்துறைகளின் ஏறக்குறைய 50% பொறியாளர்களுக்கு, இத்துறை தொடர்பான பல மொழிநடைகள்(terminology) பற்றி அறிமுகம் தரப்படவில்லை. அதேசமயம், சாப்ட்வேர் துறை சாராத பொறியியலை எடுத்துக்கொண்டால், basic computer programming and algorithm design தெரியாத பட்டதாரிகளின் எண்ணிக்கை 65% - 70% வரை உயர்கிறது.

CS/IT மற்றும் அத்துறை சாராத மொத்தம் 55,000 பொறியாளர்கள், Aspiring Minds Computer Adaptive (AMCAT) தேர்வை எழுதினார்கள். இத்தேர்வானது, ஒரு பொறியியல் மாணவர் தனது இளநிலைப் படிப்பின் முடிவில், எந்தளவு ப்ரோகிராமிங் செய்யும் திறனை பெற்றிருக்கிறார் என்பதை மதிப்பிட்டது. இத்தேர்வு ஒரு கணினி அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வாகும். மாணவர்களின், பகுப்பாய்வு, திறன்கள், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை இத்தேர்வு மதிப்பிடுகிறது.

ஆண்டிற்கு 6 லட்சம் பட்டதாரிகள் பொறியியல் கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவருகிறார்கள். IT துறை அவற்றில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. ஆனால், நிஜ உலக நிலைமை இவ்வாறு இருக்கிறது. தொழில்துறை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்களின் தரம் இருப்பதில்லை.

இன்போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற ஐ.டி., நிறுவனங்களுக்கும், மைக்ரோசாப்ட், கூகுள், அடோப் போன்ற நிறுவனங்களுக்கும், அடிப்படை கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் அறிவு, டேட்டா கட்டமைப்பு மற்றும் அல்கோரிதம் டிசைன் ஆகியவற்றை பயன்படுத்துவதில் திறமை பெற்ற நபர்கள் தேவைப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் மற்றும் அல்கோரிதம் வடிவமைப்பு ஆகியவை, ஐ.டி., துறைக்கு அதிகம் தேவைப்படும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

சர்வேயின் இந்த எதிர்மறை தகவல்கள், இத்துறை சார்ந்த பொறியியல் கல்வியின் கற்பித்தல் - கற்றல் முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. அவை, தேவையான பகுதிகளில் நல்ல புரிதலை கட்டமைப்பதற்கு பதிலாக, வெறுமனே கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

எனவே, பல்கலைகளின் தொழில்நுட்ப பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமான தருணம் இப்போது வந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.