Pages

Saturday, October 19, 2013

சார்க் நாட்டு பல்கலை படிப்புகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்!...

சார்க் நாடுகளின் பல்கலைகளில், 5 வகையான முதுநிலைப் படிப்புகளுக்கு, ஒரேவிதமான பாடத்திட்டத்தைப் பின்பற்றக்கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corporate governance, Digital governance, Regional economic planning, Sustainable development and Heritage & culture ஆகிய 5 படிப்புகளுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள சார்க் நாட்டு பல்கலைகளுடைய துணைவேந்தர்கள் மாநாட்டில் இந்த பொதுப் பாடத்திட்ட வரையறை இறுதி செய்யப்படும்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலையில் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதிகளில், சார்க் நாட்டு பல்கலைகளின் துணைவேந்தர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஒத்துழைக்கவும், பின்னர் இணைந்து செயல்படவும் என்ற வாசகத்திற்கேற்ப, கல்வியாளர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளார்கள். மோகன்லால் சுகாதியா பல்கலையின் துணைவேந்தர், இந்த செயல்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு நாடும், தனது பொருளாதாரம் மற்றும் பூகோளம் சார்ந்து, தனக்கான முன்னுரிமை விஷயங்களைக் கொண்டிருக்கும். அந்த வகையில், மேற்கூறிய படிப்புகள் இறுதி செய்யப்பட்டன. மேலும், பப்ளிஷிங் பிழைகளை தவிர்க்கும் வகையில், மேற்கூறிய பொதுப் பாடத்திட்ட படிப்புகளுக்கு, ஒரே பொது பப்ளிஷரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தகவல்தொடர்பில் ஏற்படும் இடைவெளிகளை தவிர்க்க, ஒரு Online forum அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பாடத்திட்ட உருவாக்கத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிட, ஒரு எக்சிகியூடிவ் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. இதுதவிர, சார்க் நாட்டு பல்கலைகள், தங்கள் மாணவர்களின் நலன்களுக்காக, சர்வசேத அளவில் கலாச்சார மற்றும் விளையாட்டு பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இசைந்துள்ளன. உச்சகட்டமாக, மேலாண்மை மற்றும் செயல்பாட்டு விதங்களை பார்வையிட்டு, பகுப்பாய்வு செய்துகொள்ளும் வகையில், சார்க் பல்கலைகளுக்கு இடையே, துணைவேந்தர் பரிமாற்ற திட்டத்தை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.