Pages

Saturday, October 19, 2013

மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண்: மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவரை கலெக்டர் பாராட்டினார்.

கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்தார். இத்தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்ற கடலூர் சி.கே.பள்ளி மாணவர் அர்ஜூன் தன்ராஜ், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார். அதில் அவர், 5 மதிப்பெண் பெற்றதன் மூலம், மொத்த மதிப்பெண் 1,180 ஆக உயர்ந்ததால், அவரும் மாவட்ட முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

அதனையொட்டி, மாணவர் அர்ஜூன் தன்ராஜிக்கு கலெக்டர் கிர்லோஷ்குமார் மாவட்ட முதலிடத்தை பிடித்ததற்கான கேடயத்தை வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.