தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் நேரம் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் கேட்கும் படிவங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அங்கு செல்லாமல் இருந்து விடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான மதுமதி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அக்டோபர் முதல் தேதி முதல் 31ம் தேதி வரை புதிய வாக்காளர் சேர்க்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செ ய்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளும் இதற்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள பணிகளை செ ய்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 70 பள்ளி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட படிவங்கள் வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தூத்துக்குடி தொகுதி வாக்குப்பதிவு அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான மதுமதி தலைமையில் பயிற்சி நடந்தது. மாநகராட்சி தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன், துணைத் தாசில்தார் பரமசிவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணைய நடைமுறைகளை விளக்கி கமிஷனர் மதுமதி பேசியதாவது;
1.1.2014ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது முடிந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் பணிகள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் வரும் அக்டோர் மாதம் முதல் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 70 பள்ளி மையங்களில் புதியதாக வாக்காளர்களாக சேர்வதற்கு, திருத்தம் செ ய்வதற்கும் படிவம் 6 மற்றும் 8 ஆகியவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்தில் ஒரு மாதமும் ஒரு ஆசிரியர் பணியில் இருந்து மக்களுக்கு படிவங்களை வழங்குவர். படிவங்களை புதியதாக சேர்பவர்கள் பூர்த்தி செ ய்து கொடுக்க வேண்டும். படிவங்கள் பூர்த்தி செ ய்ய தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களான ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும்.
ஒரு மாதமும் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் மையங்களுக்கு செல்ல வேண்டும். இதில் காலதாமதம் இருக்க கூடாது. மாலையில் முடியும் வரை இருக்க வேண்டும். பள்ளி மையத்திற்கு சென்றோம். அங்கு யாருமே இல்லை என்கிற புகார் எதுவும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதிகமான வாக்காளர்களை தூத்துக்குடி தொகுதியில் சேர்க்க வேண்டும். இதில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அக்டோபர் மாதம் 6, 20, 27 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இநத முகாமிலும் மக்கள் பங்கேற்று புதிய வாக்காளர்களாக சேர்ந்து கொள்ளலாம். 18 வயது முடிந்தவர் ஒருவர் கூட விடுபடாமல் கண்டிப்பாக வாக்காளர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும். தனியார் இணையதள மையம் மூலமாகவும் புதிய வாக்காளர்களாக சேர அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மையங்களுக்கு வர முடியாதவர்கள் குறிப்பிட்ட சில தனியார் இணையதள மையம் மூலமாகவும் வாக்காளர்களாக சேரலாம். மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தூத்துக்குடியில் 18 வயது முடிந்த அனைவரும் வாக்காளர்களாக சேர்ந்து விட்டனர் என்கிற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் மதுமதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.