Pages

Friday, September 27, 2013

டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது. சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: முதுகலை தமிழாசிரியர் தேர்வில், 47 கேள்விகள், தவறாகவும், பிழையாகவும் அச்சிடப்பட்டுள்ளன.
இதனால், கேள்விகளின் அர்த்தமே மாறிவிட்டன. சில கேள்விகளை, புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அதிக எழுத்துப் பிழைகள் இருந்தன. காங்கிரஸ் என்பதை, காதுரஸ் என்றும், அவுரங்கசீப் என்பதற்கு, அவுரதுசீப் என்றும், கணியன் பூங்குன்றனார் என்பதை, கனியன் பூதுகுன்றனார் என, பிழைகள் நீள்கின்றன.தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 150க்கு, 47 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வழக்கில், தமிழ் பாட தேர்வை, 8,000 பேர் தான் எழுதினர்; அது, பெரிய எண்ணிக்கை இல்லை என்று, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார் கருத்து தெரிவித்துள்ளார்.பிழையில்லாத கேள்வித்தாள் தயாரிக்க முடியாத, டி.ஆர்.பி., தலைவர்,அந்த பதவியை வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரை, உடனடியாக, சஸ்பெண்ட் செய்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.