இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து நேற்று இரவு ஒரு தரப்பு கூறிய கருத்தை வெளியிட்டிருந்தோம். இது குறித்து இன்று பல்வேறு தரப்பின் மூலம் அறியப்பட்ட செய்தியில் வழக்கு காலதாமதத்திற்கு உண்மையான காரணம் நீதியரசர்களின் மாறுதல், பதவி உயர்வு ஆகும். நீதிமன்ற வழக்கு காலதாமதத்திற்கான சில காரணங்கள், நீதிமன்ற வழக்கு என்றாலே இன்று பட்டியல் வரிசை எண்ணில் பதிவாகி இருக்கும், ஆனால் வழக்கு அடையவதில்லை (Reach), மீண்டும் அந்த பட்டியலில் வழக்கு இடம்பெறுவது குறைந்தது 2 வாரமாவது ஆகும்.
இது போன்ற நிகழ்வுகள் உயர்நீதிமன்றத்தில் நிகழ்வது மிகச்சாதராணம். ஏற்கெனவே மற்றும் தற்பொழுது முதன்மை அமர்வில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு மற்றும் மாற்றுப்பணி மூலம் நியமிக்கப்படுவதாலும் வழக்குகள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குற்றம் கூறுவது என்பது நமது ஆசிரியர் சமுதாயத்திற்கு ஏற்புடையது இல்லை. எனவே கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் தங்கள் கருத்துகள் மற்றவர்களின் மனதை பாதிக்காத வகையில் வெளிப்படுத்துவதே சாலச்சிறந்தது.
வழக்கு உயர்நீதிமன்ற அமர்வில் உள்ளதால், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேற்று வெளியிடப்பட்ட கருத்துகளில் யார் மனதையாவது புண்ப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.