பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் 268 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கணேசன் தலைமையில் நடந்தது. இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 95 பெண்கள் உள்பட 268 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.