மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, புதுக்கோட்டை, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.