ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.
ஐ.ஏ.எஸ்., பதவிக்கு மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 6,217; ஐ.பி.எஸ்., பதவிக்கு 4,730. வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு, பயிற்சி முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது.
கடந்த ஓராண்டுகளில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது மாநில அரசுகள் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீது, மத்திய அரசு தலையிடவில்லை என ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.