Pages

Friday, August 23, 2013

10ம் வகுப்பு மறுகூட்டல்: 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது: மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டல் கோரி, விண்ணப்பிக்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். 27ம் தேதிக்குள், வங்கியில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.