சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாளில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்பிற்கான தேர்வு, நேற்று(15ம் தேதி) நடப்பதாக இருந்தது.
இத்தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட நுழைவு சீட்டை கொண்டு, 24ம் தேதி தேர்வை எழுதலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.