மலேசிய கல்வித்துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான், சமீபத்தில் கூறுகையில், "மலேசியாவில் மலாய் மொழி பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளை தடை செய்ய வேண்டும். அப்போது தான் தேச ஒற்றுமை ஏற்படும்" என்றார்.
அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மலேசிய இந்தியன் காங்., கட்சி தலைவர் பழனிவேல்கூறியதாவது: மலேசியா சுதந்திரமடைவதற்கு முன்பே, தமிழ் மொழி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கூட்டாட்சி அமைப்பில், ஒரு குறிப்பிட்ட மொழி பள்ளிகளுக்கு தடை விதிக்கக்கோருவது கண்டனத்துக்குரியது என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.