Pages

Sunday, April 21, 2013

உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர், செல்வராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், உள்ளன. இப்பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க, சிறப்பாசிரியர்கள், நியமிக்கப்படுகின்றனர்.

பள்ளிகளில், இது போன்ற பயிற்சிகளை அளிக்க, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், காலியாக உள்ளன. பணி மாறுதல், ஓய்வு என, ஆண்டுதோறும் பணியிடங்கள் காலியாகி வருகின்றன, இவை, கடந்த, 15 ஆண்டுகளாக, நிரப்பப்படவில்லை.

தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர் பணியிடங்கள், நிரப்பப்படவில்லை. கடந்தாண்டு, 1,200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, பணி நியமனம் நடைபெறவில்லை. அரசு தலையிட்டு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேணடும். இவ்வாறு, செல்வராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.