"உண்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய மூன்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பாடு" என, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பேசினார்.
குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "சக்தி யுகம்" எனும் உற்சாகப் பேச்சு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி சரவணன் "சிவில் சர்வீசஸ்" எனும் தலைப்பில் பேசியதாவது:
சிவில் சர்வீசஸ் துறை சமுதாயத்துக்கு சேவை செய்யும் வாய்ப்பையும், ஓர் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. நிம்மதியான வாழ்க்கை என்பது மனதில் உருவாகும் திருப்தியை பொறுத்தது; அது சமுதாயத்துக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அமையும்.
இத்துறையானது, பொறுப்புகளை அதிகரித்து உயரிய அந்தஸ்தை வழங்குகிறது. இளைஞர்கள் விடா முயற்சியுடன், கடுமையாக உழைத்தால் எளிதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உருவாகலாம். வாழ்வில் வெற்றி, இலக்கில் வெற்றி என இரண்டு வகை உள்ளன.
வாழ்வில் வெற்றி என்பதைவிட இலக்கில் வெற்றி என்பதே சுவாரசியமானது. உண்மை, அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இவையே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வாய்ப்பாடு. நாள்தோறும் பத்திரிகைகளையும், 6-10 ம் வகுப்பு வரையுள்ள சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களையும் படிப்பது நல்லது.
கிராமப்புற மாணவர்கள், தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும் இத்துறையில் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஊக்குவிப்பு, தொழில்முனைவோர் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கல்லூரி இணை தாளாளர் சங்கர் வாணவராயர், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.