Pages

Sunday, April 21, 2013

ஈடுபாட்டுடன் படித்தால் முன்னுக்கு வரலாம்

"கல்வியை ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே முன்னுக்கு வர முடியும்" என நெல்லை கண்ணன் பேசினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், எறுமனூர் சி.எஸ்.எம்., கல்லூரி ஆண்டு விழா, நிறுவன தலைவர் மகாவீர் சந்த் தலைமையில் நடந்தது. செயலர் அபிராமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார். முதல்வர் ராஜப்பன், ஒன்றியத்தலைவர் சுந்தரராஜன், உதவி பேராசிரியர்கள் கலைவாணன், இதயவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், நெல்லை கண்ணன் பேசியதாவது: தமிழ் மொழியின் இனிமையை இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை இல்லாமல் எத்தனையோ பெற்றோர் இருந்தாலும், ஆயிரக்கணக்கான குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, நம்நாட்டில் வேலை செய்ய முன்வர வேண்டும். கல்வியை ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே முன்னுக்கு வர முடியும்.

காமராஜர், எம்.ஜி.ஆர்., போன்றோர் படித்ததைவிட; அனுபவ அறிவே அதிகம். அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுத்தது முயற்சியும், அறிவும் தான். கோவில்களுக்கு செல்வதை விட, தாய், தந்தையை வணங்குவதே சிறந்தது. அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்தால், கடவுள் உங்களுடன் இருப்பதை உணர்வீர்கள். போலியான பக்தி அதிகமுள்ளது; மனிதனை சாமியாக கும்பிடுவதை கைவிடுங்கள்.

குழந்தைகளின் வாழ்க்கையை முன்னிறுத்தி, வீடுகளில் கேபிள் இணைப்பை துண்டியுங்கள். இரவு 8:00 மணிக்கு தூங்கச் செல்லுங்கள். அதிகாலை 3:00 முதல் 4:30 மணி வரை படித்தால் மறக்காது. இவ்வாறு நெல்லை கண்ணன் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.