திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல், கடந்த 29ம் தேதி சங்க அலுவலகத்தில்
நடந்தது. தேர்தல் அலுவலர் சரவணன் மனுக்களை பெற்றுக் கொண்டார்.மொத்தம் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 7 பேர் மட்டுமே, வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருப்பதாக, இறுதி பட்டியல், அறிவிப்பு பலகையில் ஒட்டிவிட்டு சென்று விட்டார். அதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்களின் பெயர் இடம்பெறவில்லை.
அதிர்ச்சியடைந்த இவர்கள் திருக்கோவிலூர் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 30ம் தேதி நேரில் சென்று விளக்கம் கேட்டனர். நேற்று (1ம் தேதி) திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.இதனையடுத்து நேற்று சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் ஏராளமானோர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வட்ட செயலாளர் அகஸ்டின், பொருளாளர் சக்திவேல், மாநில மகளிரணி துணை செயலாளர் புஷ்பராணி, மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.