Pages

Tuesday, April 2, 2013

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.