Pages

Thursday, April 18, 2013

அகவிலைப்படி உயர்வு தாமதம், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

இது குறித்து மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் திரு. K.K.N குட்டி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில்  4வது ஊதிய குழு அறிவிப்பின் மூலம் 1986 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை மார்ச் மற்றும் செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும். இதை எக்காரணத்தை கொண்டும் இழக்க நாங்கள் விரும்பவில்லை, எனினும் எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை.

இதையடுத்து நாங்கள் மத்திய நிதி அமைச்சகத்திடம் தொடர்பு கொண்ட போது அகவிலைப்படி உயர்வு குறித்த கோப்பு தயார் செய்து மத்திய அமைச்சகத்தின் முடிவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். ஆனால் கோப்புகள் அனுப்பி ஒரு மாத காலம் முடிந்த பின்னரும் இது குறித்த எந்தவித சாதகமான அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வரவில்லை. தொடர்ந்து விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்காதது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் பாரத பிரதமர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள  கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
இல்லையெனில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் உணவு வேலை இடைவேளையின் போது அனைத்து அரசு அலுவலகங்களிலும்,
அவரவர் பணிபுரியும் இடத்தில் போராட்டம் நடத்தி, பாரத பிரதமர் அவர்களுக்கு "அகவிலைப்படி உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும்" என கோரி தந்தி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.