Pages

Tuesday, March 19, 2013

துறைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

துறைத் தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்சி.,) அறிவித்துள்ளது.
அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும். உரிய கட்டணத்தைச் செலுத்தி இத்தேர்வுகளை எழுதலாம்.

துறைத் தேர்வுகள் மே 24 முதல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை பற்றி இணையதளத்தில் அறியலாம்.

மே மாதம் நடக்கவிருக்கும் இந்த தேர்வு இந்தியா முழுவதும் 33 மையங்களில் நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://tnpsconline.tn.nic.in/DEM/Start.asp என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.