சிவகங்கையில் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சிவகங்கையில் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, தடகள விளையாட்டுகளில் பங்கேற்க, ஏராளமான வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இவர்கள் பயிற்சி பெற, மாவட்ட விளையாட்டு அரங்கில் வசதி உள்ளது. இருப்பினும், வெளி மாவட்ட மாணவர்கள் தங்கி பயிற்சி பெற, விடுதி வசதி இல்லை. இங்கு விளையாட்டு விடுதி கட்டவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு இது வரை விடுதி கட்ட நிதி ஒதுக்கவில்லை.
அரசும் மாவட்டந்தோறும் விளையாட்டு விடுதி கட்டப்படும் என உறுதி அளித்தது. ஆனால், இதற்கான முயற்சி சிவகங்கையில் தொடங்கவில்லை. இதனால், விளையாட்டு வீரர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இவற்றை தவிர்க்க, அரசு விரைந்து, சிவகங்கையில் மாணவர்கள் விளையாட்டு விடுதி கட்டவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கால்பந்து கழக தலைவர் முனியாண்டி கூறுகையில், "சிவகங்கையில், விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி கட்ட, 5 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு கோரிக்கை வைத்தோம். சிவகங்கையில் விளையாட்டு விடுதி கட்டக்கோரி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளோம்," என்றார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.