Pages

Tuesday, March 19, 2013

அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, புதுச்சேரி அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவர் அருணாசலம், பொதுச் செயலாளர் புவனராஜா கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். 6, 7, 8ம் வகுப்புகளுக்கு 3 ஆசிரியர்கள் உள்ளனர். மொழியாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் இல்லை.

ஆரம்ப வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல், மாணவர்கள் தமிழ் எழுத்தே தெரியவில்லை என ஆதங்கப்படுவதில் நியாயமில்லை. எனவே, இப்பள்ளிக்கு உடனடியாக 3 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழித்துறை, தனது பழைய மருத்துவமனை வளாகத்தை, அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஒப்படைத்து 6 ஆண்டுகளாகியும், அங்குள்ள பழைய கட்டடத்தை இடிக்காமல் புதர் மண்டிக்கிடக்கிறது. அந்த இடத்தை சுத்தம் செய்யவேண்டும். கொடாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி அருகே சேதமடைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சொந்தமான கட்டடத்தை சுத்தம் செய்து பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

கொடாத்தூரில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் சவுடு கலந்து வருவதால், மக்களால் குடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், நல்ல நீர் உள்ள பகுதியில் போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.