காமராஜர் பல்கலை.,ஆண்டிபட்டி கல்லூரியில், இந்த ஆண்டிலாவது முதுகலை வகுப்புகள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கல்லூரியை 2002ல், முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். பி.எஸ்.சி.,கணிதம், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில்,850 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரியில் உள்ள கட்டடங்களில் 13 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இவை போதுமானதாக இல்லாததால், இட நெருக்கடி உள்ளது.
கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. சுற்றுச் சுவர் இல்லாததால், வெளியாட்கள் கல்லூரி வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். விளையாட்டு மைதானத்தில் போதுமான உபகரணங்கள் இல்லை. கல்லூரிக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதுடன், இந்த ஆண்டிலாவது முதுகலை வகுப்புகள் துவக்கப்படுமா, என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.