Pages

Sunday, March 17, 2013

ராணுவ பணி கிடைப்பதோடு, நாட்டுக்கு சேவை செய்யவும் முடியும்: மதுரை ஆட்சியர்

ராணுவத்தில் பணி கிடைக்கிறது என்று சொல்வதை விட, நாட்டுக்கு சேவை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லலாம் என, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த, ராணுவத்தில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்ட இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

மே 6 - 12 வரை, 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு முகாம், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. மதுரை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்கான உடற்தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக, 15 நாட்கள் சிறப்பு முகாம் மைதானத்தில் இலவசமாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்கள் தேர்வானால் உங்களுக்கு பணி மட்டும் கிடைப்பதில்லை. நாட்டுக்கு சேவை செய்யும் நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது, என்றார்.

ராணுவ மருத்துவ தேர்வு அலுவலர் ராகுல் கூறியதாவது: ஊட்டியில் நடந்த தேர்வில் முதற்கட்டமாக 450 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அடுத்து மதுரையில் நடைபெற உள்ளது. தேர்வில் முதலில் சரிபார்ப்பது இருப்பிடச் சான்றிதழைத் தான். வருவாய்த்துறை மூலமும், ராணுவம் மூலமும் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு பெறுபவர்களுக்கு தனியாக பதிவெண் வழங்கப்படும். மீண்டும் மருத்துவத் தேர்வு, கடைசியாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர், என்றார். கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், ராணுவ உதவி தேர்வு அலுவலர் சுபாஷ் சந்த் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.