இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியிடங்கள் தற்காலிகம் (பணியிடம் மட்டும் தான் தற்காலிகம், நியமனம் - முறையான நியமனம்) அல்லது நிரந்திர பணியிடங்கள் என்று அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்படும்.
இதில் நிரந்திர பணியிடங்களுக்கான (SAME CATEGORY TEACHERS) ஊதியம் மற்றும் இதர படிகள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் ஏற்படாமல் ஒவ்வொரும் மாதமும் உரிய ஆசிரியர்களுக்கு கிடைக்கும். ஆனால் அதே பள்ளிகளில் தற்காலிக பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அப்பணியிடம் நீடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க நிர்வாக காரணங்களால் காலதாமதம் ஏற்படின் அதுவரை உரிய ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க பெறாமல் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இதேபோல் அரசாணை எண். 101, 109 மற்றும் 162 ஆகியவைகள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட 215 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அரசாணை எண்.101, 170 மூலம் தோற்றுவிக்கப்பட்ட 575 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2013ஆம் மாதம் வரை பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது. மார்ச் 2013ஆம் மாதம் 18 நாட்கள் கடந்தும் இன்னும் ஊதியம் பெற முடியாமல் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அவதிபடுகின்றன. இதனால் அவர்களின் பணியில் தொய்வு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர் அவர்கள் இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசிலீத்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்ற பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உங்கள் மூலம் விடிவுகாலம் பிறக்க வழிவகை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.