Pages

Monday, March 18, 2013

ஹைடெக் மாடல் பள்ளி திட்டம் முடக்கம்: மாணவர்கள் கல்வி பாதிப்பு

அரசு அறிவித்த ஹைடெக் மாடல் பள்ளி திட்டம், எவ்வித முன்னேற்றமும் இன்றி, கிடப்பில் போடபட்டுள்ளதால், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி முடக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரத்தில், "கஸ்தூரிபாய் காந்தி ஹைடெக் மாடல் பள்ளி துவங்கப்படும்" என, அரசு அறிவித்தது. ஆங்கில வழிக் கல்வியுடன், உண்டு உறைவிடப் பள்ளியாக அமைக்கப்பட இருப்பதால், ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும் என தெரிவிக்கபட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 2009ம் ஆண்டு, ராமாபுரம் பஞ்சாயத்துக்கு சொந்தமான தோப்புக்காடு புறம்போக்கு நிலத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவு நிலம், பள்ளி அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யபபட்டது.

ஆனால், இதுவரை, பள்ளி அமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு சார்பில், கிராமப்புற ஏழை மாணவர்கள், நகர்புற மாணவர்களுக்கு இணையான கல்வி பெறவேண்டும் என்பதற்காக, உண்டு உறைவிடப்பள்ளியாக துவங்க அறிவிக்கப்பட்ட அரசு திட்டம், செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

"நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஏழை மாணவர்களுக்கும், ஹைடெக் கல்வி பயில வரப்பிரசாதமாக அமைய இருந்த கஸ்தூரிபாய் காந்தி ஹைடெக் உண்டு உறைவிட மாடல் பள்ளி திட்டம் செயல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.