Pages

Tuesday, March 19, 2013

30ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இக்கூட்டதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2012& 13ம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணத்தை  பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன் கருதி வரும் 30ம் தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பள்ளி மாணவர்களைப்பற்றிய விவரங்களை ஆன் லைன் முறையில் பதிவு செய்ய, 10 பள்ளிகளுக்கு ஒரு தகவல் சேகரிப்பு மையத்தை (நோடல் சென்டர்) அமைக்க வேண்டும். மாணவர்களை புத்தக சுமையைக் குறைக்க முப்பருவ கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் கல்வியாண்டில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வர உள்ளது. அதே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும்.  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரம் உள்ளன. இவற்றை கண்காணிக்க கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.