நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பாதிக்காத வகையில், தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம்.
எனவே, செய்முறை தேர்வு நடக்கும் மையங்களில், தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு அரசு செய்து தர வேண்டும் என, தினமலர் (பிப்.,5) நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செய்முறை தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் உள்ள பகுதியில், காலை 9.30 முதல் 12.30 மணி வரையும், மதியம் 1.30 முதல் மாலை 4.30 மணி வரையும் தடையின்றி மின்சாரம் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே நிலை எழுத்து தேர்வின் போதும் இருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.