Pages

Wednesday, February 13, 2013

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தல்

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 2013ல் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வினை, முதன் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (Direct Private Candidates) தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளியிலேயே செய்முறைத் தேர்வுகளுக்கு வருகை புரிதல் வேண்டும்.

செய்முறைத் தேர்வுகள் பிப்.,20 முதல் பிப்.,28ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகளில் கலந்து கொள்ள தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Admission Slip) சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பிப்.,18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான செய்முறை நோட்டுப் புத்தகத்தை (Record Note) தவறாது செய்முறைத் தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட தேர்வர்கள் மட்டுமே கருத்தியல் (Theory) தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

செய்முறைத் தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை அணுகலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.