குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட செய்தி:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-1ல் அடங்கிய துணை ஆட்சியர் (8), காவல் துறை துணை கண்காணிப்பாளர் (4), வணிகவரித் துறை துணை ஆணையாளர் (7), மாவட்டப் பதிவாளர் (1) மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி(5) ஆகிய பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு வரும் 16-ம் தேதி காலை, தமிழகம் முழுவதுமுள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய வலைதளத்திலிருந்து இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.