மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் 65வது கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.1000கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கினார். இந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு லேப்டாப் வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இந்த பணி விரைவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment