திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம் செய்தவர்களுக்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காரில் தப்பினர். மாணவர்களிடமிருந்து 650 புத்தகத்தை பறிமுதல் செய்த ஆசிரியர்கள், திருப்புவனம் போலீசில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு நேற்று காலை 8 மணிக்கு பள்ளி முன், கார்களில் வந்த சிலர், மாணவர்களுக்கு "தி கதியோன் இண்டர்நேஷனல்" என்ற வாசகம் அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தை வினியோகித்தனர்.
பள்ளி வளாகத்தில் தேர்வுக்காக படித்து கொண்டிருந்த மாணவர்களிடமும் புதிய ஏற்பாடு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, வைகை மேம்பாலம் அருகே பள்ளி முகப்பில் நின்று, புத்தகங்கள் வழங்கினர்.
அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை அறிந்த புத்தகங்கள் வழங்கியவர்கள், அங்கிருந்து சென்றனர்.
தலைமை ஆசிரியர் அப்துல்ரஹீம் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து 650 புதிய ஏற்பாடு புத்தகங்களை பறிமுதல் செய்து, திருப்புவனம் போலீசில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.