Pages

Saturday, January 26, 2013

34 ஆண்டுகளாக பதவி உயர்வி இல்லை: தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேதனை

பள்ளிக்கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் 1978ல் மேல்நிலை பள்ளி முறை துவங்கிய போது, பல தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை பதவி உயர்வு.

இதை, கல்வி துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவர்களில் வணிகவியல் ஆசிரியர்களை மட்டும், கடந்த ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை.

தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகத்தில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணியில் சேருபவர், தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து, முதுகலை ஆசிரியர் அளவிற்கு பதவி உயர்வு பெறுகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தகுதியுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்திய, எங்களுக்கு பதவி உயர்வு இல்லை. போராட்டங்கள் நடத்தியும் பூஜ்யம் தான், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.