Pages

Saturday, January 26, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 311 மையங்களில் பிப்ரவரி 1 முதல் பயிற்சி

தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது.
தற்போது 2ம் கட்டமாக பாட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் நான்கு நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழ் பாட ஆசிரியர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும், ஆங்கில பாடத்தில் பிப்ரவரி மாதம் 8, 9, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், கணித பாடத்தில் பிப்ரவரி மாதம் 4, 5, 15 மற்றும் 16ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது.
அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 1, 2, 13 மற்றும் 14ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 11, 12, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது.
இதில் தமிழ் பாடத்தில் 6,950 ஆசிரியர்களுக்கு 71 மையங்கள், ஆங்கில பாடத்தில் 2,256 பேருக்கு 33 மையங்கள், கணித பாடத்தில் 7,564 பேருக்கு 78 மையங்கள், சமூக அறிவியல் பாடத்தில் 7,848 பேருக்கு 80 மையங்கள், அறிவியல் பாடத்தில் 4,558 பேருக்கு 49 மையங்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மொத்தம் 29 ஆயிரத்து 176 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் பயிற்சி நடக்கிறது.இப்பயிற்சிக்காக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் 2 கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.